அக்கரையில் யுத்தம்
இக்கரையில் சத்தம்
அக்கரையின் இரத்தம்
இக்கரையில் சிந்தும்
அக்கரையில் செத்தும்
இக்கரைக்கு வந்தும்
இக்கரையின் பாட்டும்
எக்கரையும் கேட்டும்
இக்கரை மட்டும்
அக்கரை நிற்கும்
அக்கரையில் வேட்டு
இக்கரையின் கூட்டு!
அக்கரையின் ஆட்டம்
இக்கரையின் ஊட்டம்!
அக்கரையில் இன்றும்
இக்கரையின் குற்றம்
எக்கரையும் என்றும்
இக்கரையைத் தூற்றும்
அக்கறையில் கூட்டம்
இக்கரையில் கூட்டும்
எக்கரையும் எட்டும்
ஆதரவு கொட்டும்!
அக்கரையை வெட்டும்!!
Thursday, March 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment