Wednesday, April 15, 2009

அய்யகோ அய்யகோ என் செய்வ தய்யகோ!


அய்யகோ
அய்யகோ
என் செய்வ
தய்யகோ!

கொய்வதோ
கொய்வதோ
எம்மினத் தலைகளை
கொய்வதோ?

செய்வதோ
செய்வதோ
இவ்வரச படைகள்
செய்வதோ!

மெய்யதோ
மெய்யதோ
வந்த சேதி
மெய்யதோ?

உரியதோ
உரியதோ
உமக்கிது
உரியதோ?

வலியதோ
வலியதோ
எம்மினம்
வலியதோ!

கொடியதோ
கொடியதோ
எம் நோக்கு
கொடியதோ?

உரைப்பதோ
உரைப்பதோ
பொய்யினை
உரைப்பதோ?

முறையதோ
முறையதோ
உமக்கிது
முறையதோ?

குவியுதோ
குவியுதோ
பிணங்களிங்கு
குவியுதோ!

தணியுதோ
தணியுதோ
உன் வெஞ்சினம்
தணியுதோ!

இறையிதோ
இறையிதோ
நீர் கூறும்
இறையிதோ!

குறையதோ
குறையதோ
எம் உரம்
குறையதோ?

சரியுதோ
சரியுதோ
உம் பக்கஞ்
சரியுதோ!

புரியுதோ
புரியுதோ
இஃதுனக்கு
புரியுதோ!

புலியிதோ
புலியிதோ
காக்க வந்த
புலியிதோ!!

Sunday, April 12, 2009

இந்த நாளும் கடந்து போகும்


சொந்த மண்ணும் களவு போகும்
உற்ற உறவும் அற்றுப் போகும்
பெற்றப் பிள்ளை களத்தில் சாகும்
எத்துணை உயிர்கள் தொலைந்து போகும்
எந்த னினமும் அழிந்து போகும்!!

அந்த நாளும் கடந்து போகும்
இந்த நாளும் கடந்து போனால்…
அந்த நாளும் கடந்து போகும்!

எந்த நாடும் உடைந்து போகும்
சங்கெ டுத்து முழங்கிப் போனால்…
எந்த நாடும் உடைந்து போகும்!

சிங்க தேசம் உறைந்து போகும்
இந்த தேசம் உயிர்த்து நின்றால்…
சிங்க தேசம் உறைந்து போகும்!

அந்த நாளும் கடந்து போகும்
இழந்த தேசம் நமது ஆகும்!
ஈழத் தேசம் மலர்ந்து போகும்!

எந்த நாளும் கடந்து போகும்!
இந்த நாளும் கடந்து சென்றால்...
எந்த நாளும் கடந்து போகும்!

Sunday, April 5, 2009

விழுதுகளே வாருங்கள்!

விழுதுகளே வாருங்கள்!

வேர்களாய் மாறுங்கள்!

துவக்குகள் சூழ்ந்திடினும்

துயரங்கள் துடைத்தெடுப்போம்

பிக்குகள் சபித்திடினும்

தனியாட்சி அமைத்தெடுப்போம்

துளிகளின்று ஒன்றானால்

தோல்விகளென்றும் வேறாகும்

விழுதுகளே வாருங்கள்!

வேர்களாய் மாறுங்கள்!!!